மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது + "||" + 268 liquor bottles seized from Puducherry car in Perambalur - Tamilnadu People Progressive District President arrested

புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது

புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 13 அட்டைப்பெட்டிகளில் 268 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் ஜெயக்கொடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(வயது 41), பெரம்பலூர் அஞ்சுகம் நகரை சேர்ந்த பாலு (38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பெரம்பலூருக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கொடைக்கானல் அருகே 4 வாலிபர்கள் காரில் கடத்தல் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
கொடைக்கானல் அருகே கேரள வாலிபர்கள் 4 பேரை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
2. புதுச்சேரியை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம்
புதுச்சேரியை சேர்ந்த உதவி பேராசிரியர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
3. புதுச்சேரி சட்டமன்ற பணிகள் கம்ப்யூட்டர் மயமாகிறது அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி
புதுவை சட்டமன்ற பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குவது தொடர்பாக அலுவலர்களுக்கான 2 நாள் பயிற்சியை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.
4. புதுச்சேரியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தடை
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி கூறினார்.
5. கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள ஒரே பகுதி புதுச்சேரிதான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்த இந்தப் பகுதியில் பிரான்ஸின் தாக்கத்தை பார்க்கலாம்.