மாவட்ட செய்திகள்

வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The strike was followed by the unions in Puducherry

வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுவையில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்தும் இயங்கின. சில தொழில்நிறுவனங்களில் குறைவான அளவில் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். வங்கிகளிலும் பெரும்பலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த அபிசேகம், சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தேனி, கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
2. உடுமலையில் போலீசாரை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் மன்னார்குடி அருகே பரபரப்பு
மன்னார்குடி அருகே எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் போராட்டம்
செம்பனார்கோவில் அருகே நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குறைவாக சம்பளம் வழங்கியதை கண்டித்து 100 நாள் பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம்
வையம்பட்டி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கியதை கண்டித்து தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.