மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு + "||" + Government hospital Collector survey

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர்,

அவர்கள் புறநோயாளிகள் பிரிவு பகுதிக்கு சென்று ஆண், பெண் இரு வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்து உடல் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் குழந்தைகள் வார்டு மற்றும் மகப்பேறு பிரிவு வார்டு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரத்தை கேட்டறிந்து ஆஸ்பத்திரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...