மாவட்ட செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார் + "||" + Assistant Collector Vijayalakshmi provided benefits to beneficiaries

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
உடையார்பாளையம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொங்கல் வாழ்த்து மடல்களையும், 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாற்றம், நிலப்பட்டா மாற்றம் நகல் களுக்கான ஆணைகள், 27 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, இயற்கை மரணம், திருமண உதவித்தொகைக்கான ஆணைகள், 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 892 மதிப்பில் விசைத்தெளிப்பான் கருவிகள், 4 பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரத்து 176 மதிப்பில் மழைத்தூவான், வீரியரக விதைகள், 10 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் என ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 568 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரண்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சங்கர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் குமரைய்யா நன்றி தெரிவித்தார். 

அதிகம் வாசிக்கப்பட்டவை