மாவட்ட செய்திகள்

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு:கணவர்-மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறைசாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு + "||" + Suicide case 3 year jail for husband and mother

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு:கணவர்-மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறைசாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு:கணவர்-மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறைசாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கெள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா சோமள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கய்யா. இவரது மனைவி சின்னம்மா. இவர்களது மகன் கோபாலசாமி. வியாபாரி. கோபாலசாமியின் மனைவி திரிவேணி. இந்த நிலையில் திரிவேணியின் நடத்தையில் கோபாலசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னம்மாவும், தனது மகனுக்கு ஆதரவாக திரிவேணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா் இதனால் மனமுடைந்த திரிவேணி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

சிகிச்சை பலனின்றி

அதன்பேரில் வீட்டில் யாரும் இல்லாத ேநரத்தில் திரிவேணி தனது உடலில் மண்எண்ெணய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 29- ந்தேதி நடந்தது. திரிவேணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந்தேதி அவர் இறந்தார். இதுகுறித்து திரிவேணியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தெரக்கனாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலசாமி மற்றும் அவரது தாயார் சின்னம்மாைவ கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சாம்ராஜ்நகர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தலா 3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது திரிவேணியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவர் கோபாலசாமி மற்றும் மாமியார் சின்னம்மா ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்களை போலீசார் சாம்ராஜ் நகர் மத்திய சிறையில் அடைத்தனர்.