மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிரைவிங் லைசென்சு ஒட்டி வலம் வரும் கடைக்காரர் + "||" + On the front of the scooter Driving license The drive in shopkeeper

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிரைவிங் லைசென்சு ஒட்டி வலம் வரும் கடைக்காரர்

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிரைவிங் லைசென்சு ஒட்டி வலம் வரும் கடைக்காரர்
புதுவையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டி செல்வோரை ஆங்காங்கே மடக்கி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்களின் சோதனைக்கு வாகன ஓட்டிகள் யாரும் தப்பிவிட முடியாது.
புதுச்சேரி,

நகரப்பகுதியில் அருகருகே காவல் நிலையங்கள் இருப்பதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓரிடத்தில் நின்று சோதனை நடத்துகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடியின் அறிவுறுத்தலின்பேரில் ஸ்பாட் பைன் விதித்தும் வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆவணங்களை காட்டி செல்லும் முன்பு வாகன ஓட்டிகளுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இதனால் அவசரமாக செல்பவர்கள் தாங்கள் செல்லுமிடத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடிவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது ஸ்கூட்டரின் முன்பகுதியில் வண்டியின் ஆர்.சி.புக், டிரைவிங் லைசென்சு போன்ற ஆவணங்களை பெரிய அளவில் நகல் எடுத்து ஒட்டி வைத்தபடி செல்கிறார். புதுவை முத்துலிங்கம்பேட்டையை சேர்ந்த ஜூஸ் கடைக்காரரான மனோகரன் போலீசாரின் தொடர் வாகன சோதனையினால் பாதிக்கப்பட்டதால் இவ்வாறு ஆவணங்களை வண்டியில் ஒட்டி செல்கிறார். இவ்வாறு அவர் வாகனங்களில் செல்லும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை