மாவட்ட செய்திகள்

விமான கழிவறையில் பதுக்கியரூ.1.20 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் + "||" + Rs.1.20 crore gold lumps seized

விமான கழிவறையில் பதுக்கியரூ.1.20 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்

விமான கழிவறையில் பதுக்கியரூ.1.20 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்
விமான கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புனே, 

புனே சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து புனே வழியாக பெங்களூரு செல்லும் விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் புனேயில் தரை இறங்கிய அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் தங்கக்கட்டிகள் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி அங்குலம் அங்குலமாக சோதனை போட்டனர்.

தங்கக்கட்டிகள் பறிமுதல்

இந்த சோதனையின் போது, விமானத்தின் கழிவறையில் தங்கக்கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். அந்த தங்கக்கட்டிகளை கடத்தி வந்த பயணி யார் என்பது தெரியவில்லை.

இது குறித்து புனே விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்கக்கட்டிகளை கடத்தி கொண்டு வந்த பயணியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.