மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக கொண்டாட வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு + "||" + Pongal is a non-plastic festival Collector Raman Talk

பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக கொண்டாட வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு

பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக கொண்டாட வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
‘இந்த ஆண்டு பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும்’ என்று வேலூரில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் ராமன் கேட்டுக் கொண்டார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம். பெண்கள் கலைக்கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் மணிநாதன், முதல்வர் சுதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான்பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ராமன் அவரது மனைவி தேவியுடன் கலந்து கொண்டார். விழாவை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமாகும். மக்களுக்கு உணவினை வழங்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பெருமைப்படுத்தி உலகறிய செய்திடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலன்று காலை சூரியனை வணங்கி, தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், இனம், மொழி, வாழ்க்கை முறையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக கொண்டாடி வருகிறோம்.

ஜல்லிக்கட்டு மீட்பு நடவடிக்கை மூலம் பொங்கல் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களின் பண்டிகையாகும். இதனை நமது முன்னோர்கள் எப்படி கொண்டாடினார்கள்? தற்போது எப்படி கொண்டாடி வருகிறோம் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இந்த ஆண்டு பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் ராமன், மனைவி தேவி மற்றும் மாணவிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட வி.ஐ.டி.யில் படிக்கும் வெளிநாட்டு மாணவ–மாணவிகள் மற்றும் சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தர்களுக்கு கலெக்டர் ராமன் மாலை அணிவித்து வரவேற்றார்.

தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி மாணவி ஒருவர் மாட்டு வண்டி ஓட்ட அதில், 10–க்கும் மேற்பட்ட மாணவிகள் பயணம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விழாவில், உதவி சுற்றுலா அலுவலர் இளம்முருகன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் செலவு கணக்கு உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
தேர்தல் செலவு கணக்கு சரியாக இல்லாமல், உண்மைக்கு புறம்பாக இருந்தால் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலூரில் பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.
3. வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
4. 3½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வேலூரில் நடந்த முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
5. முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ராமன் வழங்கினார்
முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.