மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் + "||" + The Cooperative Sugar Factory should be adopted by the Government

கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்
புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தக்கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுச்சேரி,

லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை உடனே வழங்கவேண்டும், முத்தரப்பு கூட்டம் என்ற பெயரில் விவசாயிகளை அழைத்து பழைய பாக்கிகளை பற்றி பேசாமல் 2016–17ம் ஆண்டு பாக்கி ரூ.9 கோடியே 61 லட்சத்தை பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்க எடுத்த முடிவினை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகே கரும்புகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்துக்கு புதுவை கரும்பு விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நிலவழகன் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வாழ்த்திப் பேசினார்.

உண்ணாவிரதத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் சங்கர், பத்மநாபன், ராமமூர்த்தி, முத்துலிங்கம், ராமசாமி, அன்புமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பேச்சு
மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.
2. ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மச்சாவு
செக்கானூரணி அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
4. தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
5. மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி மதுரை உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.