மாவட்ட செய்திகள்

தமிழகத்தை போல் புதுவையிலும் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்க எளிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; கவர்னரிடம், நில வணிக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை + "||" + The simple procedures to be given to the division of the land should be observed

தமிழகத்தை போல் புதுவையிலும் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்க எளிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; கவர்னரிடம், நில வணிக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தை போல் புதுவையிலும் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்க எளிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; கவர்னரிடம், நில வணிக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்க தமிழகத்தை போல் புதுவையிலும் எளிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கவர்னரிடம், நில வணிக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை, நில வணிக உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

புதுவையில் பல வருடங்களாக குடியிருக்கும் வீடுகளை விற்பனை செய்ய முடியவில்லை. இடங்களை தானசெட்டில், பவர் பத்திரம் மற்றும் அக்ரிமெண்ட் செய்ய முடியவில்லை. வீட்டு மனைகளாக பிரிக்கப்படாத காலத்தில் குழி கணக்கீட்டில் விற்பனை செய்த இடங்களை தற்போது அதே அடிப்படையில் விற்பனை செய்ய முடியவில்லை

நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மனைகளை பதிவு செய்வது போல் கிராமப்பகுதிகளிலும் மனைகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருந்து வரும் சொத்துக்களை கூட பதிவு செய்ய மறுக்கிறார்கள். எனவே அந்த இடங்களை எந்த வித நிபந்தனையும் இன்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி விரைவில் அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விற்பனை செய்யப்பட்ட மனைப்பிரிவில் 10 மனைகளுக்குள் மீதம் இருக்கும் பட்சத்தில் அதனை அபிவிருத்தி கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு கிரையம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மனைகளை அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடுவை நீக்க வேண்டும். தனிமனையை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்குவதில் உள்ள அபிவிருத்தி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

31–11–2017க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பாசனவாய்க்கால் துறையில் அளவையாளர் இல்லை. எனவே தடையில்லா சான்றிதழ் கிடைக்க மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழகத்தை போல் புதுவையிலும் எளிய முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.