மாவட்ட செய்திகள்

வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு + "||" + Steps should be taken to restore the route

வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு

வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மங்கலம் பெரிய புத்தூர் பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து மனுஒன்றை கொடுத

திருப்பூர்,

திருப்பூர் மங்கலம் பெரியபுத்தூர் ஊருக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் நொய்யல் ஆற்றங்கரையை வழிதடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வழித்தடம் தற்போது புதர்மண்டி பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தை எங்கள் சொந்த செலவில் பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனிப்பட்ட நபர் அந்த பாதை வழியாக எங்களை செல்ல அனுமதிக்காமல் இருந்து வருகிறார். அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்ட ஒருநபர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பிளீச்சிங் நிறுவனம் நடத்தி வரும் அந்த நபர், நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றி வந்தார்.

இதை நாங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதை மனதில் வைத்து கொண்டு தான் எங்களை அந்த பாதை வழியாக செல்ல மறுத்து வருகிறார். இதனால் எங்கள் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.