மாவட்ட செய்திகள்

விஷ பிரசாதம் சாப்பிட்டதால் பாதிப்பு:சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்கள் உள்பட 6 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி + "||" + 6 people including women Back to hospital

விஷ பிரசாதம் சாப்பிட்டதால் பாதிப்பு:சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்கள் உள்பட 6 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஷ பிரசாதம் சாப்பிட்டதால் பாதிப்பு:சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்கள் உள்பட 6 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
விஷ பிரசாதம் சாப்பிட்டதில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய பெண்கள் உள்பட 6 போ் மீண்டும் ஆஸ்பத்்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொள்ளேகால், 

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிச்சுகுத்தி மாரம்மா கோவில். இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப்பிட்ட 17 பேர் இறந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டவா்கள் மைசூரு, கொள்ளேகால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே இருந்த பிரச்சினையில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்தது.

6 பேருக்கு சிகிச்சை

மேலும் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சாளூர் இளைய மடாதிபதி மகாதேவசாமி உள்பட 4 பேரை ராமபுரா போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் விஷபிரசாதம் சாப்பிட்டதில் எம்.ஜி.தொட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மா, வீரம்மா, பழனி, கமலா, ரேகா, மல்லிகா ஆகியோருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

இந்த நிலையில் அவர்கள் 6 பேருக்கும் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொள்ளேகாலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.