மாவட்ட செய்திகள்

நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் + "||" + Condemned the opening of the direct procurement center Farmers stir

நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்

நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்
நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து திருமருகலில் சாலையில் நெல் கொட்டி விவசாயிகள் மறியில் ஈடுபட்டனர்.

திருமருகல்,

திருமருகலில் தற்போது சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து திருமருகல் கடைத்தெருவில் சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகூர்–சன்னாநல்லூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. மேச்சேரி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
மேச்சேரி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
2. குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
3. கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம்
கொடுமுடி காவிரி ஆற்றில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
5. பயிர்இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விவசாயிகள் மனு
பயிர் இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கமுதி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.