மாவட்ட செய்திகள்

விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்ம சாவு + "||" + In virukampakkam Cinema deputy director Mysterious death

விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்ம சாவு

விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்ம சாவு
விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், திருவேங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் வினிகிளாட்சன்(வயது 35). சினிமா துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்து கொண்டு, தற்போது விளம்பர படங்களையும் எடுத்து வந்தார். இவருடைய மனைவி அனிவிமலா(34). இவர்களுக்கு நிரலயா(4) என்ற மகள் இருக்கிறாள்.

நேற்று முன்தினம் இரவு வினிகிளாட்சன் தனது மனைவி மற்றும் மகளுடன் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். வினிகிளாட்சன் மட்டும் தனி அறையில் படுத்து தூங்கினார்.

நேற்று காலையில் எழுந்த அனிவிமலா, தனி அறையில் படுத்து தூங்கிய தனது கணவரை தட்டி எழுப்பினார். ஆனால் நீண்டநேரம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடல் அசைவற்ற நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிவிமலா, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வினி கிளாட்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார், வினிகிளாட்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிகிளாட்சன், மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.
2. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
3. லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி சாவில் மர்மம் - விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு நியமனம்
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமியின் மர்ம சாவு குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
5. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு
சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.