மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம் + "||" + Jakto Geo demonstration

சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ–ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கூட்டுறவு வங்கி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.