மாவட்ட செய்திகள்

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + The public waits for the storm relief at Alangudi Taluk office

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி,

ஆலங்குடி தாலுகா திரு வரங்குளம் ஒன்றியத்தில், மாஞ்சன் விடுதி, பாப்பான் பட்டி, மழவராயன்பட்டி, வீரடிப்பட்டி, பிலாப்பட்டி என 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 1,100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இந்த ஊராட்சி பகுதி புயலால் பாதிக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் 650 குடும்ப அட்டைதாரர்கள் புயல் நிவாரணம் கேட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண நிதி எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில், ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரெத்தினாவதி, வல்லத்திரா கோட்டை வட்ட வருவாய் அலுவலர் விநோதினி, கீரமங்கலம் வட்ட வருவாய் அலுவலர் ரெங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் அரசு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்டுக்கோட்டையில் அரசு டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்
பட்டுக்கோட்டையில் நேற்று அரசு டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு; ஊடகங்களுக்கு அனுமதி
மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை நேரடி ஒலிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு மம்தா பானர்ஜி அனுமதி வழங்கியுள்ளார்.
4. ஈரோடு ரெயில் நிலையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை