மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை + "||" + Near Arani Was a male murdered in rotten condition? Police investigation

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
ஆரணி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கண்ணமங்கலம்,

ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் முள்ளண்டிரம் செல்லும் சாலையில் உள்ள பாலத்திற்கு அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
2. கருங்கலில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
கருங்கலில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
3. 10 மாத குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பரமத்திவேலூர் அருகே 10 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
5. ராஜபாளையம் அருகே பயங்கரம், பேராசிரியர் மனைவி கழுத்தை அறுத்து கொலை - மர்ம நபர் வெறிச்செயல்
ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-