மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை + "||" + Vedaranyam is rehearsing for the 2nd day to prevent the penetration of terrorists

வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை

வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை
வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2-வது நாளாக ஒத்திகை நடந்தது.
வேதாரண்யம்,

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை பிடிப்பது எப்படி? தீவிரவாதிகள் கடல் வழியாக வருவதை கண்காணிப்பது எப்படி? ஊடுருவலை தடுப்பது எப்படி? என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியை போலீசார் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு “ஆபரேசன் சீ விஜில்” என்ற பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் போலீசாருடன் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் ஒத்திகையில் ஈடுபட்டனர். கடலோர பகுதியான வேதாரண்யத்தில் நேற்று 2-வது நாளாக ஒத்திகை நடைபெற்றது. நாகை மாவட்டம் முழுவதும் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 370 போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இதில் போலீசாரே தீவிரவாதிகள் போல கடல் வழியாக ஊருக்குள் ஊடுருவினர். அவர்களை பிடிப்பதற்காக மற்ற போலீசார் வேதாரண்யம் பகுதியில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த வாகன சோதனை தொடர்ந்து நடந்தது.

வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது.