மாவட்ட செய்திகள்

போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் + "||" + Do not be fooled by using a duplicate website and a passport officer requests the public

போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்

போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்
போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
திருச்சி,

சமீபகாலமாக www.pass-p-o-rt-o-n-l-i-n-e-i-n-d-ia.com என்ற போலி இணையதளத்தின் மூலமாக பாஸ்போர்ட்டு விண்ணப்பதாரர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரிய வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்து முன் அனுமதி தேதி கிடைக்காமலும், கூடுதல் பணம் கட்டியும் ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த இணையதளம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை திருடி ஏமாற்றி வருகிறது.

பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https:// www.pass-p-o-rt-i-n-d-ia.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் மட்டுமே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து பயன் அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

போலி இணையதளத்தின் மூலம் பல விண்ணப்ப தாரர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார துறைக்கு பல புகார்கள் செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்திற்கு இதுபோன்ற புகார்கள் இதுவரை வரவில்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேர் கைது
தஞ்சையில் வீட்டில் வைத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேர் சிறையில் அடைப்பு
பெரம்பலூரில் போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
3. வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறலாம்
தமிழகத்தில் வீட்டில் இருந்தபடியே போலீஸ் நற்சான்றை இணையதளத்தில் பெறும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
4. தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்கள் பறிமுதல்
தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்ததுடன், 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
5. ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை
ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.