மாவட்ட செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு + "||" + In Chennai, the price of fish Increase

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
பருவநிலை மாற்றத்தால் மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் சென்னையில் மீன்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
சென்னை,

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வீசும் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பும் நிலை உள்ளது.

எனவே கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரி எம்.சி.பி. சதீஷ்குமார் கூறியதாவது:-

மீன்கள் வரத்து குறைவால் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் மீன்கள் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி வஞ்சரம் (சிறியது) ஒரு கிலோ ரூ.650, வஞ்சரம் (பெரியது) ரூ.700, மத்தி ரூ.100, கவளை ரூ.100, பெரிய சங்கரா ரூ.250, சுறா ரூ.180, வெள்ளை கிழங்கா ரூ.350, ஷீலா ரூ.300, அயிலா ரூ.170, ஏரி வவ்வால் ரூ.100, கட்லா ரூ.120, பாறை ரூ.200, நெத்திலி- ரூ.130 என மீன் வகைகள் விலை உயர்ந்துள்ளது.

ரூ.120-க்கு விற்பனையான நண்டு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. இறால் வகைக்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னை திரு.வி.க.நகர், சிந்தாதிரிப்பேட்டை, வானகரம், புழல் காவாங்கரை உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சைபர் குற்றங்களை தடுக்க சென்னையில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் குறும்பட சி.டி.யை கமிஷனர் வெளியிட்டார்
இணையதள குற்றங்கள் எனப்படும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காக சென்னை நகர போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
2. சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி நாளை நடக்கிறது
பழமையான கார்கள் கண்காட்சி, சென்னையில் நாளை நடக்கிறது.
3. சென்னையில் அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா
விழாவுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பேராசிரியர் க.ராமசாமி மற்றும் தமிழ்பற்றாளன் ஆகியோருக்கு ‘அறவாணர் சாதனை விருது’களை வழங்கினார்.
4. சென்னையில் திருக்குறள் மாநாடு வைகோ, கி.வீரமணி பங்கேற்பு
சென்னையில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில், வைகோ, கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
5. சென்னையில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை
சென்னை தீவுத்திடலில் பேரிடர் மீட்பு பயிற்சி தொடர்பான கண்காட்சியும், துறைமுகத்தில் ஒத்திகையும் நடந்தது.