மாவட்ட செய்திகள்

கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு 1,786 பேர் எழுதினர் + "||" + Co-operative PhD researcher wrote 1,786 papers for work

கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு 1,786 பேர் எழுதினர்

கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு 1,786 பேர் எழுதினர்
கரூரில், நடந்த கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 1,786 பேர் எழுதினர்.
கரூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளர் பணிக்கான குரூப் 3-ஏ தேர்வு கரூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? எனவும், பார்வைத்திறன் குறைபாடுடையோர் உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத போதிய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறுகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டுறவுத்துறைக்கான இளநிலை ஆய்வாளர் பணிக்கான குரூப் 3 - ஏ தேர்வு கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வெற்றி விநாயகா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வினை எழுதுவதற்கு 2,560 பேர் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் இதில் 1,786 பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 774 பேர் தேர்வு எழுதவரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர் களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் தலைமையிலான இரண்டு நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலைக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவிலுக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
2. நாகர்கோவிலில் 4 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
3. திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பயிற்சியில் சேர்ப்பதற்கான தகுதி தேர்வு
திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பயிற்சியில் சேர்ப்பதற்கான தகுதிதேர்வு நடந்தது.
4. அரியலூர் மாவட்ட கராத்தே போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு
கராத்தே போட்டியின் ஒரு பிரிவான வூசு போட்டிக்கு அரியலூர் மாவட்ட அணிக்கான தேர்வு ஜெயங்கொண்டத்தில் நடந்தது.
5. சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் வழங்கியது
சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.