மாவட்ட செய்திகள்

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + On the occasion of the anniversary of the anniversary of Anna's statue

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
பெரம்பலூர்,

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் அண்ணாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் சிவன் கோவில் முன்புள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.