மாவட்ட செய்திகள்

மனைவி 3–வது முறையாக கர்ப்பமாக இருக்கும்போது போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த வாலிபர் திருப்பூரில் பரபரப்பு + "||" + When the wife is pregnant for the third time At the police station Younger who refused to hug a false lover

மனைவி 3–வது முறையாக கர்ப்பமாக இருக்கும்போது போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த வாலிபர் திருப்பூரில் பரபரப்பு

மனைவி 3–வது முறையாக கர்ப்பமாக இருக்கும்போது போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த வாலிபர் திருப்பூரில் பரபரப்பு
மனைவி 3–வது முறையாக கர்ப்பமாக இருக்கும்போது, போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த வாலிபரால், திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி,

தரையில் படரும் பூங்கொடிக்கு தழுவ கொம்பு கிடைத்தால் போதும், அந்த கொம்பின் தன்மையை குறித்து ஆராயாமல் உடனே தழுவிக்கொள்ளும். மனைவி 3–வது முறையாக கர்ப்பமான நிலையில், மனைவினை மட்டும் விட்டு விட்டு ஊருக்கு சென்ற வாலிபர் 10 நாட்களில் இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது காலத்தின் கோலமா, மேலைநாட்டு கலாசாரத்தின் மோகமா, இளமையின் உந்துதலா!

பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கு திருணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் திருப்பூர் வஞ்சிபாளையம் ராஜ் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு அந்த வாலிபர் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றார். இதற்கிடையில் அந்த வாலிபரின் மனைவி 3–வது முறையாக கர்ப்பமானதால், மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் விட்டு விட்டு அவர் மட்டும் பீகார் சென்றார். அங்கு 10 நாட்கள் மட்டுமே தங்கிய வாலிபர் அங்குள்ள 17 வயது இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் அவர்களுக்குள், நீயில்லாமல் நானில்லை, நானில்லாமல் நீயில்லை என்றானது. இதையடுத்து அந்த வாலிபர் பீகாரில் இருந்து கள்ளக்காதலியை திருப்பூர் அழைத்து வந்து, தனது நண்பர் தங்கும் விடுதியில் தங்க வைத்து கவனித்து வந்ததாகத்தெரிகிறது.

இதற்கிடையில் அந்த பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர், தான் அழைத்து வந்த பெண்ணை (கள்ளக்காதலியை) அனுப்ப முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் வீரபாண்டி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபருக்கு, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அப்போது அந்த வாலிபர், போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை காற்று போகாத அளவுக்கு இறுக்கமாக அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரிடமிருந்து அந்த பெண்ணை மீட்க பெற்றோர் மற்றும் போலீசார் முயற்சி செய்தும் முடியவில்லை. சுமார் 30 நிமிடம் விடாகண்ணாகவும், கொடாகண்ணாகவும் நடந்த விளையாட்டில் ஒரு வழியாக இருவரையும் பிரித்தனர். அதன்பிறகு அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி சொந்த ஊரான பீகாருக்கு பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். வாலிபரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது அந்த பெண், தனது கண்ணில் இருந்து அந்த வாலிபர் மறையும் வரை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு
குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.
3. கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார் சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்ற வாலிபர்; போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு
திருப்பூரில் கேட்பாரற்று சாவியுடன் நின்ற மோட்டார்சைக்கிளை சொந்த வேலைக்கு எடுத்துச்சென்று விட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
4. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.