மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி திருப்பூருக்கு 10-ந்தேதி வருகை: விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனர் அறிவுரை + "||" + PM Modi to visit Tiruppur on 10th: If the suspects stay in hotels, inform police - Commissioner advice

பிரதமர் மோடி திருப்பூருக்கு 10-ந்தேதி வருகை: விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனர் அறிவுரை

பிரதமர் மோடி திருப்பூருக்கு 10-ந்தேதி வருகை: விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனர் அறிவுரை
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் வருகை தர உள்ளார்.
திருப்பூர், 

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் வருகை தருகிறார். இதையொட்டி திருப்பூரில் உள்ள விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதியில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான பாதுகாப்பு நடைமுறையை அனைத்து விடுதி நிர்வாகத்தினரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறைகளை பதிவு செய்பவர்களுடைய முழு விவரங்கள், அடையாள சான்று, புகைப்படம், அறையில் தங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக சேகரித்து வைக்க வேண்டும். அறைகளில் யாராவது சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது
மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.
2. அபுதாபியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அமீரக அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கப்பட்டது.
3. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. 2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்சு சென்றடைந்தார்.
5. இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி
இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.