மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்புகாங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள்அசோக் சவான் அறிவிப்பு + "||" + Before the parliamentary election date is released 50 campaign meetings on behalf of Congress Ashok Chavan Announcement

நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்புகாங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள்அசோக் சவான் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்புகாங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள்அசோக் சவான் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு 50 பிரசார கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக மாநிலத்தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.
மும்பை,

நாடாளுமன்ற தேர்தலை தேசியவாத காங்கிரசுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மும்முரம் காட்டி உள்ளது.

ஏற்கனவே ஜனசங்கர்ஷ் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு மேலும் 50 ஜனசங்கர்ஷ் பொதுக்கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஜனசங்கர்ஷ் மூலம் நான் ஏற்கனவே மாநிலத்தில் 6,500 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். இதன் மூலம் 120 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து உள்ளேன். இவ்வாறு மக்களை சந்திக்கும் போது மத்திய, மாநில பா.ஜனதா அரசுகளின் தோல்விகளை எடுத்துரைத்து வருகிறேன். தகுதியற்ற மற்றும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். செல்லும் வழியெல்லாம் காங்கிரசுக்கு மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனசங்கர்ஷ் மூலம் மேலும் 50 பிரசார கூட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த தீவிரம் காட்டி வருகிறோம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பைத்தான் மற்றும் புனே நகரங்களில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொலைத் தொடர்பு நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: கட்டிடங்கள் தணிக்கையில் ஊழல் -அசோக் சவான் குற்றச்சாட்டு
மும்பையில் 9 மாடி தொலை தொடர்பு நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தின் எதிரொலியாக கட்டிடங்கள் தணிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக அசோக் சவான் குற்றம்சாட்டினார்.
2. மும்பையில், கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து ஜனநாயக படுகொலைக்கு மராட்டிய அரசு உதவுகிறது - அசோக் சவான் குற்றச்சாட்டு
மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்களை தங்கவைத்து ஜனநாயக படுகொலைக்கு மராட்டிய அரசு உதவுவதாக அசோக் சவான் குற்றம் சாட்டியுள்ளார்.
3. மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ராஜினாமா ஏற்பு
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும், ஓரிரு நாளில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : அசோக் சவான் கருத்து
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அசோக் சவான் கருத்து தெரிவித்தார்.
5. மராட்டியத்தில் ‘காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அசோக் சவான் பேட்டி
மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பு ஏற்பதாக அசோக் சவான் கூறினார்.