மாவட்ட செய்திகள்

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் + "||" + A bribe of Rs. 30 thousand was purchased Villupuram zone urban ceremonies Assistant Director Staff dismissal

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம், 

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் திண்டிவனம், வானூர் பகுதிகளில் அமைத்திருந்த வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்காக அனுமதி கேட்டு விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேசை அணுகினார். அப்போது அவர் ரூ.1 லட்சம் லஞ்சமாக தரும்படியும், அந்த தொகையை தவணை முறையில் கொடுக்கலாம் என்றும் கூறினார். மேலும் அவர் முதல் தவணையாக ரூ.30 ஆயிரத்தை தரும்படியும் கேட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துச்சென்று உதவி இயக்குனர் லோகேசிடம் ஜெயராமன் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது லோகேசை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் பலவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேசை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை
கயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. மகப்பேறு உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய அரசு செவிலியருக்கு 3 ஆண்டு ஜெயில்
மகப்பேறு உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு 3 ஆண்டு ஜெயிலில் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. சிங்கப்பூரில் லஞ்ச புகாரில் இந்தியருக்கு சிறை : ரூ.40 ஆயிரம் அபராதம்
சிங்கப்பூரின் கிழக்கு பிராந்தியத்தில் சாங்கி விமான நிலையம் உள்ளது. இங்குள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் 2015 முதல் 2016 வரை வேலை பார்த்து வந்தவர் ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் (வயது 37). இந்தியர்.
4. குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.