மாவட்ட செய்திகள்

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு + "||" + Scores do not determine life alone, Self confidence training class Collector Talk

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்று ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி,

தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சி ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

தமிழக அரசு மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் ஆர்வம், கவனம், தன்னம்பிக்கை, முயற்சி மற்றும் ஆசை இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும். புதிய பாடங்களை படிக்காமல் தற்போது படித்த பாடங்களை திரும்ப படிக்கும் போது அது நம் நினைவுக்கு வரும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கூர்ந்து கவனித்தால் மனதில் ஆழமாய் பதியும்.

உணவு, உறக்கமும் மிகவும் முக்கியமானது. எந்த ஒரு செயலிலும் நாம் பயத்துடன் ஈடுபடக்கூடாது. கல்வி என்பது புத்தகங்களை மனப்பாடம் செய்வது மட்டும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நல்லது மற்றும் தீய விசயங்களை அறிந்து கொள்வதே கல்வியாகும்.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. நமக்கு பிடித்தமான விளையாட்டு, இசை, கலை, அரசியல் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எளிதில் வாழ்வில் வெற்றி பெற முடியும். லட்சியம் தெளிவாக இருந்தால் உயர்ந்த இடத்தை எளிதில் பெற முடியும். மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியை புனிதா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதா? என கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்கள் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளனவா? என்று கண்டறிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்.
2. மாவட்டத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
3. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.
4. 100 சதவீதம் வாக்குப்பதிவு, 10 ஆயிரம் வீடுகளுக்கு கலெக்டர் கடிதம் - தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது
100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகளுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ், தபால் துறை மூலம் கடிதம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளார்.
5. தேவதானப்பட்டி அருகே, பறக்கும் படையோடு இணைந்து கலெக்டர் வாகன தணிக்கை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேவதானப்பட்டி அருகே பறக்கும் படையினரோடு இணைந்து மாவட்ட கலெக்டரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.