மாவட்ட செய்திகள்

கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது + "||" + The old man has been arrested by a stone cracker near the plant

கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது

கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது
கருங்கல் அருகே முன்விரோதத்தில் முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்,

கருங்கல் அருகே பூட்டேற்றி கொசவன்விளை பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65), தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தொபியாஸ் (47), தொழிலாளி. தொபியாஸ் தினமும் மதுகுடித்து விட்டு சபரிமுத்துவிடம் தகராறு செய்து வந்ததால், அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சபரிமுத்து தனது வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொபியாஸ், சபரிமுத்துவை வழிமறித்தார். இதனால் அவர்களிடையே தகராறு நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த தொபியாஸ் அருகில் கிடந்த கல்லை எடுத்து சபரிமுத்துவை ஆவேசத்துடன் தாக்கினார். இதில் அவர் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சபரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக தொபியாசை போலீசார் கைது செய்தனர். சபரிமுத்துவை கொலை செய்தபோது, தொபியாஸ் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை; கார்த்தி சிதம்பரம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
2. கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஆத்தூரில், லோடு ஆட்டோவில் கடத்திய ரூ.29 லட்சம் கஞ்சா பறிமுதல் - டிரைவர் கைது
ஆத்தூரில் லோடு ஆட்டோவில் கடத்திய ரூ.29 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
4. நெல்லையில், பேராசிரியரை வழிமறித்து பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
நெல்லையில் கல்லூரி பேராசிரியரை வழிமறித்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. வானூரை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வானூரை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.