மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை + "||" + Traumatic failure in examination: Trail in front of the train Engineering student suicide

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசாத்தூர் பகுதியை சேர்ந்த சார்லசின் மகள் சவுந்தர்யா(வயது 18). இவர் திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். சவுந்தர்யாவுடன் அவரது சகோதரியும் உடன் படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சவுந்தர்யா 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கல்லூரியின் அருகே குமாரமங்கலம் பகுதியில் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பருவ தேர்வில் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மாணவி சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீர் தற்கொலை
மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குச்சீட்டு எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலாளி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
2. வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை
அந்தியூர் அருகே தூக்குப்போட்டு டி.வி. மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.
4. மூங்கில்துறைப்பட்டு அருகே, பிரபல ரவுடி ,விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
மூங்கில்துறைப்பட்டு அருகே பிரபல ரவுடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் குப்பையில் வீசப்பட்ட சத்து மாத்திரைகள்
தாமரைக்குளம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் சத்து மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டு இருந்தன.