மாவட்ட செய்திகள்

நாகை அருகே பரிதாபம்: காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை + "||" + The scene near the Naga: The suicide police are investigating the murder of a boyfriend

நாகை அருகே பரிதாபம்: காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

நாகை அருகே பரிதாபம்: காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை
நாகை அருகே சிறுமி ஒருவர் காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 16 வயது சிறுமி ஒருவர் காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை: விஷம் குடித்து தச்சுதொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை அடைந்த தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்– காசோலைகளை தவறவிட்ட வங்கி மேலாளர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கி மேலாளர் ஒருவர் தனது பணம்– காசோலைகள் மற்றும் அடையாள அட்டைகளை தவறவிட்டார். இதை போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
4. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் விசாரணை நடத்தினார்.
5. திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை
திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.