மாவட்ட செய்திகள்

சேலத்தில்மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது + "||" + In Salem Jewel with jewelery, money laundering   4 people arrested

சேலத்தில்மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது

சேலத்தில்மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது
சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், 

சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி அலமேலு (வயது 65). இவர் சம்பவத்தன்று அல்லிக்குட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 4 பேர் வந்தனர். திடீரென்று அவர்கள் மூதாட்டியை வழிமறித்தனர்.

பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் கைப்பையில் வைத்திருந்த ரூ.600 ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அலமேலு, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் 4 பேரையும் தேடி வந்தார்.

இந்த நிலையில் பிரபல ரவுடிகளான அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்த விஜி (33), சண்முகம் (30), ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முரளிதரன் (37) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையொட்டி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் வருமான வரி சோதனை: முன்னாள் கவுன்சிலர் அண்ணன் வீட்டில் 70 பவுன் நகை, ரூ.19 லட்சம் பறிமுதல்
ஓசூரில் முன்னாள் கவுன்சிலரின் அண்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 19 லட்சம், 70 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தீயணைப்புத்துறை அலுவலர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை - கதவை உடைத்து துணிகரம்
தீயணைப்புத்துறை அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
3. நாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில் அருகே வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
4. உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் ரூ.73 லட்சம் நகை, பணம் திருட்டு வேலைக்காரர்கள் உள்பட 3 பேர் கைது
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதி வீட்டில் ரூ.73 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற வேலைக்காரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. சேலத்தில் வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு
சேலத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.