மாவட்ட செய்திகள்

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Minority organizations demonstrated

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய சிறுபான்மை கழக நிறுவன தலைவர் சதக்கத்துல்லா மவுலானா தலைமை தாங்கினார். முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஜைனுதீன், மக்கள் தேசம் கட்சி தலைவர் பாக்கியராஜ், லட்சிய திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கருப்பையா உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகை, வாட் வரி நிலுவை தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றை இதுநாள் வரை வழங்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க கோரிக்கை
மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. போலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
போலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து நீடாமங்கலத்தில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.