மாவட்ட செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள் + "||" + 247 seats for teaching and office work at AIIMS Medical Centers

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப் படுகிறது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி உள்ளிட்ட பலதரப்பட்ட படிப்பு முடித்தவர் களுக்கும் பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

நிறுத்தி வைப்பு

இதேபோல போபாலில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் அலுவலக பணிகளுக்கு 231 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி இருந்தது. 15-2-2019-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது பற்றிய மறு அறிவிப்பு www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி பேராசிரியர் பணி

இதேபோல ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 26 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 19 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 38 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 32 இடங்களும் உள்ளன. பணியிடங்கள் உள்ள மருத்துவ பிரிவு வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி வருகிற மார்ச் 31-ந்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.