மாவட்ட செய்திகள்

திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை + "||" + A suicide bomber investigated by a student who was trained in the 'Nit' exam in Trichy

திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,

திருச்சி முசிறி பழைய சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்தவர் சின்னையா (வயது 54). விவசாயி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (19). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த இவர், நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார்.

இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். ஆனால் முசிறியில் இருந்து அடிக்கடி வந்துவிட்டு செல்ல முடியாது என்பதால் திருச்சி பீமநகர் கணபதிபுரத்தில் வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சரிவர படிக்க முடியாமல் அவர் அவதி அடைந்து வந்தார்.

பெற்றோர் அதிக செலவு செய்து தன்னை படிக்க வைத்து வரும் சூழ்நிலையில் தான் படிக்க முடியாததை எண்ணி பிரியதர்ஷினி மனமுடைந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பகல் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்த பெற்றோர் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து செசன்சுகோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்– காசோலைகளை தவறவிட்ட வங்கி மேலாளர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கி மேலாளர் ஒருவர் தனது பணம்– காசோலைகள் மற்றும் அடையாள அட்டைகளை தவறவிட்டார். இதை போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
2. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் விசாரணை நடத்தினார்.
3. திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை
திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. அரியலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகளை அடித்து உடைத்ததால் பதற்றம் போலீசார் குவிப்பு
அரியலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
5. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.