மாவட்ட செய்திகள்

தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் + "||" + Students struggle to boycott classes asking for bus facility

தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
தாளவாடி அருகே பஸ் வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே குண்ணன்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் கெட்டவாடி, பனக்கள்ளி, கல்மண்டிபுரம், எரகனகள்ளி, ஜீர்கள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தாளவாடியில் இருந்து குண்ணன்புரம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை.

இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் அந்தப்பகுதியில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பறை வசதி வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் மற்றும் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று காலை பள்ளிக்கூடம் வந்த மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து கழக அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கூடத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததோடு தூய்மையின்றி காணப்படுகிறது.

எனவே விரைவில் பஸ் வசதி செய்துகொடுப்பதோடு, பள்ளிக்கூட வளாகத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு அதிகாரிகள் 2 நாட்களில் பஸ் வசதி செய்து கொடுப்பதோடு, பள்ளிக்கூட வளாகத்தில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஓட்டு பதிவானதால் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஓட்டு பதிவானதாக பரபரப்பு ஏற்பட்டது.
2. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ
தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி-கலெக்டர் அன்பழகன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது.
3. அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
5. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலம் அருகே இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.