மாவட்ட செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல் + "||" + The school student and students are demanding the release of the chief editor of bribery case

லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்
திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை விடுவித்து பணியில் அமர்த்த வலியுறுத்தி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போராட தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
எலச்சிபாளையம்,

திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவருக்கு, அவரது 7 மாத சம்பள நிலுவையை பெற்றுத்தருவதாக கூறி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான தங்கள் தலைமை ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் நேற்று காலை திடீரென திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 10 நிமிடமே இந்த சாலை மறியல் நடைபெற்றது.

இதனிடையே மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) என்பவரையும், செங்கோட்டையன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்களின் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. துவரங்குறிச்சி அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
துவரங்குறிச்சி அருகே போதிய குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
2. மின் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
செந்துறை- உடையார்பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் 23 ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
3. குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
4. துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி காதலியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வலியுறுத்தினால் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.