மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம் + "||" + Van collided and crashed in a tree; The girl is dead

திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்
சாலையோரம் நின்ற மரத்தில் மோதியதால் வேன் நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் நடைபெறும் மாசிமகத் தெப்ப உற்சவத்தைக் காண தூத்துக்குடியிலிருந்து ஒரு வேன் மூலம் 17 பேர் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வந்தனர். வேன் திருப்பத்தூர் அருகே கருப்பூர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேன் மோதி நொறுங்கியது. வேனின் மேற்பகுதி அப்படியே பெயர்ந்து விழுந்தது. அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் தவறி கீழே விழுந்தார். டிரைவர் இல்லாமல் சிறிது தூரம் ஓடிய வேன், ஒரு வீட்டின் அருகே போய் நின்றது.

அந்த வேனில் இருந்த அனைவரும் அலறி சத்தம் போட்டனர். இந்த சம்பவத்தில் வள்ளி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகம்(50), பொன்னம்மாள்(51), தங்கவேல்(19), தெய்வானைசுந்தரி(46), சுந்தரியம்மாள்(65), வேனை ஓட்டி வந்த டிரைவர் பாலாசீர்(44) உள்பட 15 பேரை வேனில் இருந்து மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சுவர் மீது கார் மோதி விபத்து, கல்லூரி மாணவர் பரிதாப சாவு - நண்பர் படுகாயம்
கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.
2. பள்ளி வேன் மோதி, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மினிபஸ் ஏறி சாவு
கம்பம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த மினி பஸ் ஒரு வாலிபர் மீது ஏறியதில் அவர் இறந்தார். மற்றொரு வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
3. திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலியானார்.
4. திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
திருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
5. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.