மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம் + "||" + Wife died In mourning Husband's death

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்
திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது காரையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதியான் மகன் காந்தி (வயது 40). இவருக்கும் பக்கத்து ஊரான மாங்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் லட்சுமி (36) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு குழந்தையில்லாத நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாம். இதில் லட்சுமி 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் லட்சுமி இறந்த நாளில் இருந்து கணவர் காந்தி மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தாராம். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இறந்து கிடந்தார். காலையில் வெகுநேரம் ஆகியும் வீடு பூட்டியிருந்ததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது காந்தி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி அடுத்தடுத்து இறந்ததால் அக்கிராமமே சோகமாக உள்ளது. இறந்து போன காந்தி திருக்களாப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர்.


தொடர்புடைய செய்திகள்

1. நம்பியூர் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
3. தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், தேர்தல் பணியை புறக்கணிக்க முடிவு
தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து பயிற்சியை புறக்கணித்துவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 17-ந் தேதிக்குள் வழங்கவில்லையெனில் தேர்தல் பணியை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
4. திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
திருப்பத்தூர் அருகே மானகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
5. திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலி
திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய மதுரையை சேர்ந்த வாலிபர் தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.