மாவட்ட செய்திகள்

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு + "||" + Crash Kills The Sivakasi army soldier's family Compensation

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ராம்பிரசாத்(வயது23). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ வீரராக இருந்தார். திருவனந்தபுரம் முகாமுக்கு சென்று இருந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 25.5.2017 அன்று இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரம் ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ராம்பிரசாத் உயிரிழந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் மற்றும் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இழப்பீடு கோரி ராம்பிரசாத்தின் பெற்றோர் லட்சுமணன்,செல்வி ஆகியோர் விருதுநகரிலுள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி பரிமளா அதனை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர், ராம்பிரசாத் குடும்பத்துக்கு ரூ.50 லட்சத்து 4ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதில் 80 சதவீதத்தை மதுரையிலுள்ள இரு சக்கர வாகன இன்சூரன்சு நிறுவனமும் மீதமுள்ள 20 சதவீததொகையை விருதுநகரிலுள்ள லாரி நிறுவனத்தின் இன்சூரன்சு நிறுவனமும் 7½ சதவீத வட்டியுடன் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. கந்திகுப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; மருந்து கடை ஊழியர் சாவு வாலிபர் படுகாயம்
கந்திகுப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மருந்து கடை ஊழியர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
2. மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலி
பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலியானார்.
3. மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
4. அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
அருமனை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
5. மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.