மாவட்ட செய்திகள்

திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி + "||" + Why do not you care for hotels in Tamil temples like Tirupati? To the Endowment, Madurai Hour Question

திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி

திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
திருப்பதி கோவிலைப் போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த கோவில்களுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனால் கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் நிலங்களையும், சொத்துகளையும் பாதுகாப்பது குறித்தும், ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்கவும், குறைந்த வாடகை செலுத்தி கோவில்களுக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்களை கண்டறிந்து வெளியேற்றவும், கோவில்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.

கோவிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விவரங்களை அந்தந்த கோவிலின் முன்பு பக்தர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பட்டியலிடவும், கோவில் பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் அனைத்தையும் இணைய தளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போல பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களின் விடுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ஏன் செய்யவில்லை?.

திருப்பதியில் கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை?

ராமேசுவரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) உள்ளனவா? அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

முடிவில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரி வழக்கு; மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. சிறுவர்களின் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு: ‘டிக்-டாக்’ செயலிக்கான தடை நிபந்தனையுடன் நீக்கம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
3. பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. வாகனங்களில் கொடிகள் கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அரசியல் கட்சியினர் சில நடவடிக்கைகளை தவிர்த்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும் என்றும், வாகனங்களில் கொடி கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா? என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
5. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு
‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.