மாவட்ட செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம் + "||" + When the car collision worker was drinking water, it was awful

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்

கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் வலியகாட்டுவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 52), தச்சுத்தொழிலாளி. இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

முருகன் வேலைக்கு செல்வதற்கு முன் வீட்டுக்கு எதிரே உள்ள வேறொருவர் வீட்டில் குடிநீரை பிடித்து வருவது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீரை குடத்தில் பிடித்துக்கொண்டு முருகன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று      வேகமாக வந் தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் முருகன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட  முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி
தஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
சூளகிரி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள். மேலும் டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
தஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. தக்கலை அருகே மினிலாரி மோதி வாலிபர் பலி தாயின் கண்முன்னே நேர்ந்த சோகம்
தக்கலை அருகே மினிலாரி மோதி வாலிபர் பலியானார். தாயின் கண்முன்னே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
5. தென்கொரியாவில் ‘லிப்ட்’ அறுந்து 3 பேர் பலி
தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.