மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை + "||" + Pandemic near Tanjore: 53 goats killed in fire

தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை

தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை
தஞ்சை அருகே தீயில் கருகி 53 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள பூண்டி எடவாக்குடியை சேர்ந்தவர் மேகவர்ணன். இவருடைய மகன் காளீஸ்வரன்(வயது 27). இவர், பூண்டி வடக்கு பகுதியில் உள்ள ஒரு வயலில் மந்தை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இங்கு பிறந்து 40 நாட்களான 53 செம்மறி ஆட்டுக் குட்டிகளை அவர் பராமரித்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் பெரிய ஆடுகளை மேய்க்க சென்றார். 53 ஆட்டுக்குட்டிகளும் அங்கு உள்ள பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதே பகுதியில் உள்ள புதரில் திடீரென தீப்பிடித்தது.


இந்த தீ மள மளவென ஆட்டு மந்தை அமைக்கப்பட்டிருந்த வயலுக்கு பரவியது. அறுவடை முடிந்த அந்த வயலில் கிடந்த வைக்கோல் மீது தீப்பற்றியது. இதனால் ஆட்டு மந்தையும் தீப்பிடித்து எரிந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆட்டுக்குட்டிகளும், தப்பி ஓடுவதற்கு வழியின்றி தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து காளீஸ்வரன், அம்மாப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பொன்.ஸ்ரீதரனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்த சம்பவத்தில் புதரில் தீப்பிடித்தது எப்படி? யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயில் கருகிய இறந்த ஆட்டுக்குட்டிகளுக்கு கால்நடை உதவி டாக்டர் செல்வராஜ் உடற்கூறு ஆய்வு செய்தார்.

தீயில் கருகி இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

தீயில் கருகி 53 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை: விஷம் குடித்து தச்சுதொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை அடைந்த தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்– காசோலைகளை தவறவிட்ட வங்கி மேலாளர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கி மேலாளர் ஒருவர் தனது பணம்– காசோலைகள் மற்றும் அடையாள அட்டைகளை தவறவிட்டார். இதை போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
4. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் விசாரணை நடத்தினார்.
5. திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை
திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.