மாவட்ட செய்திகள்

கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம் + "||" + If Karamkudi is not running the state bus for Chennai, the struggle

கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம்

கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம்
கறம்பக்குடி-சென்னைக்கு அரசு பஸ்சை தொடர்ந்து இயக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சாந்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் வெண்ணிலா அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக அரசு பஸ் இயக்கப்படவில்லை.

இதனால் தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இட நெருக்கடியும் உள்ளது. எனவே கறம்பக்குடி-சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும். இல்லையேல் வியாபாரிகள் சார்பில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். கறம்பக் குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். கறம்பக்குடியில் நடைபெறுகிற திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் சுரேஷ், அப்துல்அஜிஸ், அப்துல்கரீம், ரோஸ்சீனிஅப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வேல் சரவணன் நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாரதீய ஜனதா பிரமுகர் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக கூறி சாலை மறியல் போராட்டம்
வேளாங்கண்ணி அருகே பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
2. அதிகாரிகள் மனு வாங்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
அதிகாரிகள் மனு வாங்காததால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கரூர் மனோகரா கார்னரில் அ.தி.மு.க.-காங்கிரஸ் போட்டி பிரசாரம்? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியால் பரபரப்பு
கரூர் மனோகரா கார்னரில் இன்று காங்கிரஸ் பிரசாரம் மேற்கொள்ளும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதே இடத்தில் அ.தி.மு.க.வும் பிரசாரம் செய்யும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
4. பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: கரூரில் காங்கிரஸ் வேட்பாளர்- முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம்
பிரசாரத்திற்கு அனுமதி மறுத்ததாக கூறி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம்
சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.