மாவட்ட செய்திகள்

பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + CITU asked for relief for fireworks workers. The trade unions demonstrated

பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,

மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததை ஏற்க மறுத்த நிர்வாகம், தொழிலாளர்கள் 99 பேரை சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்ததை கண்டித்தும், சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமர், வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் பேசுகையில், சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அத்துடன் பட்டாசு ஆலை நிர்வாகங்கள், சம்பள இழப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டப்படியான சம்பளத்தை வழங்கிட வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் மயமாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
2. பணி நிரந்தரம் கோரி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சாலையை பயன்படுத்த விமானப்படை அதிகாரிகள் தடை: கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சாலையை பயன்படுத்த விமானப்படை அதிகாரிகள் தடை விதித்ததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.