மாவட்ட செய்திகள்

பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்களை வகுப்புகளில் இருந்து அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டம் + "||" + The parents struggle to bring the students to the school headmistress from classes

பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்களை வகுப்புகளில் இருந்து அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டம்

பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்களை வகுப்புகளில் இருந்து அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டம்
பனங்குளம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி வகுப்பில் இருந்த மாணவர்களை வெளியே அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரியின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பினார்கள்.
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு வரை 20–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு 13 மாணவ, மாணவிகளே படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடி 2 நாட்களுக்கு மேலாக இறக்கப்படாமல் இரவு பகலாக பறந்ததால் பொதுமக்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தேசிய கொடி இறக்கப்பட்டது.

இந்தநிலையில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளி என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து ஒரு தற்காலிக ஆசிரியையை நியமித்துள்ளனர். ஆனால் தேசிய கொடி பிரச்சினை எழுந்ததால் நேற்று பள்ளிக்கு சென்ற தற்காலிக ஆசிரியையை பணிக்கு வர வேண்டாம் என்று தலைமை ஆசிரியை ஜோதி திருப்பி அனுப்பியுள்ளார்.


இந்த தகவல் அறிந்து பள்ளியில் கூடிய பெற்றோர்களும், இளைஞர்களும் தலைமை ஆசிரியையிடம் தற்காலிக ஆசிரியை பிரச்சினை பற்றி கேட்ட போது, தேசிய கொடி பறந்ததை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தது யார் என்று தலைமை ஆசிரியை பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு எற்பட்டது. அதன் பிறகும் தலைமை ஆசிரியை சரியான பதில் சொல்லவில்லை என்று கூறி மாணவர்களை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து சென்று நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பள்ளி தலைமை ஆசிரியை ஜோதியை மாற்ற வேண்டும் என்றும் கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை மாணவர்கள் மதிய உணவையும் புறக்கணிப்பார்கள் என்றும் பெற்றோர்கள் கூறினர்.


பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்துவது பற்றி அறிந்த திருவரங்குளம் வட்டார கல்வி அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த பெற்றோர் தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும். மேலும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்காலிகமாக மாற்று பணியில் ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என்றும், தலைமை ஆசிரியை இடமாற்றம் என்பது கல்வி ஆண்டு முடிந்த பிறகே செய்ய முடியும் என்று பெற்றோர்களிடம் சமாதானம் கூறினார். அதன் பிறகு மாணவர்களை பெற்றோர்கள் வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறை சூறையாடப்பட்டது - 250 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
2. வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம்: பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு
அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா
நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
5. நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம்
சீர்காழியில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.