மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது + "||" + The arrest of Rowdy, who was brutally murdered in front of Velankanni

வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது

வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் அந்தோணியார் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கணேஷ்குமார் (வயது 29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தவேல் (36) என்பவருக்கும் கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தவேல், கணேஷ்குமாரை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஆனந்தவேல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு கணேஷ்குமார், ஆனந்தவேல் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த ஆனந்தவேல் மனைவி சரண்யாவிடம் (28) கணேஷ்குமார் தகராறு செய்தார். இதையடுத்து தனது 3 வயது ஆண் குழந்தையை தூக்கி கொண்டு சரண்யா வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

அப்போது பின் தொடர்ந்து விரட்டி சென்ற கணேஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரண்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆனந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியான கணேஷ்குமாரை வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் கணேஷ்குமார் அவரது வீட்டிற்கு பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேஷ்குமார் மீது கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது
பொன்னமராவதி அருகே பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை கொன்று புதைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது பரபரப்பு தகவல்கள்
திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.
3. விவசாய கடன் வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
விவசாயத்திற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 22½ லட்சத்தை மோசடி செய்ததாக கம்பத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கோட்டக்குப்பம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
5. ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது
ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.