மாவட்ட செய்திகள்

தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி + "||" + Collide with the barrier The car collapses: Chief editor's son kills

தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி

தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி
தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தலைமைஆசிரியர் மகன் பரிதாபமாக இறந்தார்.
வெள்ளியணை,

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.வி. நகரை சேர்ந்தவர் ரெத்தினம். இவர் மாயனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அருள் (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அருள் வீட்டிலுள்ள காரை எடுத்து கொண்டு, தனது தாத்தா,பாட்டியை அழைத்து சென்று மகாதானபுரத்தில் அவர்களின் வீட்டில் விட்டுவிட்டு, அதே காரில் காந்திகிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது புலியூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள் ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே, ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 29 பேர் படுகாயம்
தஞ்சை அருகே ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். அவர் இறங்குவதற்காக படிக்கட்டிற்கு வந்தபோது உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது. 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
3. அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
அருமனை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
4. மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலி: திருப்பூரில் சலவை ஆலைக்கு சீல் வைப்பு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடி
வி‌ஷ வாயு தாக்கி 4 பேர் பலியானதை தொடர்ந்து திருப்பூர் சலவை ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.