மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது + "||" + Near Srivilliputhur Police Station Before 'Tik-tok Video Businessman arrested

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வீடியோ படம் எடுத்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

பல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் டிக்–டாக் செயலி தடைசெய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆங்காங்கே சிலர் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி சந்திரன்(வயது40). இவர் தங்களது ஊரில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்தப்படவுள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 18–ந் தேதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து மனு கொடுத்துள்ளார்.

மனு கொடுத்துவிட்டு திரும்பும் காட்சியை போலீஸ் நிலையத்தின் பின்னணியில் செல்போனில் பதிவு செய்து அதில் சினிமா பாடலுடன் இணைத்து ‘டிக்–டாக் வீடியோ‘ வெளியிட்டு இருக்கிறார். இது பரபரப்பினை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டு இருப்பதாக வன்னியம்பட்டி போலீஸ் நிலைய போலீஸ்காரர் காளிராஜன் புகார் கொடுத்தார். வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வானூர் தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி: வெடிகுண்டுகள் வீசிய ஆசாமிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்
தி.மு.க. பிரமுகரை கொல்ல வெடிகுண்டுகள் வீசிய மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் கூறினார்.
3. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தகவல்
மாவட்டத்தில் 160 துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கூறினார்
4. ஈரோட்டில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
ஈரோடு அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. வேலை, கடன் வாங்கித்தருவதாக மோசடி: தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
வேலூரில் தனியார் மருத்துவமனையில் வேலைவாங்கித் தருவதாகவும், கடன் பெற்றுத்தருவதாகவும் கூறி மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.