மாவட்ட செய்திகள்

கடைமடை பகுதி பயிர்களுக்காக அணைகளில் இருந்து மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் + "||" + From the dump for the crops of crops The water should be opened for 15 days

கடைமடை பகுதி பயிர்களுக்காக அணைகளில் இருந்து மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்

கடைமடை பகுதி பயிர்களுக்காக அணைகளில் இருந்து மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்
கடைமடை பகுதி பயிர் களுக்காக, அணை களில் இருந்து மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில், 

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர் கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கினார்.

பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் வேத அருள் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவ சாயம்) குணபாலன், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் மனோகரன், தோட்டக் கலைத்துறை துணை இயக் குனர் அசோக் மேக்ரின் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும், விவசாயிகள் தரப்பில் மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி. செண்பகசேகர பிள்ளை, மூர்த்தி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வரு மாறு:-

குமரி மாவட்டத்தில் பாச னத்துக்காக அணைகள் ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டு, பிப்ரவரி 28-ந் தேதி மூடப் படுவது வழக்கம். மண்டைக் காடு கோவில் திருவிழாவுக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். கடைமடை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு மேலும் 10 நாட்கள் தண்ணீர் தேவைப் படுகிறது. எனவே அணை களில் இருந்து அனைத்து கால்வாய்களிலும் மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக இந்த ஆண்டு அறுவடை நேரத்திலேயே கொள்முதல் நிலையங்களை கலெக்டர் திறக்க செய்து, கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்காக அவருக்கு விவசாயிகள் சார் பில் பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் வாங்கி வைக்கும் நெல்லை மூடைகளாக அடுக்கி வைக்க குடோன் வசதி இல்லை, சாக்கு இல்லை என்ற காரணங்களைக்கூறி கீழ்மட்ட அதிகாரிகள் குளறு படி செய்கிறார்கள். இதுதொ டர்பாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நெல்லை முழு மையாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர் திருவிழாவின்போது அதிக நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கிடையே போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பேச்சிப் பாறை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண் டும். இதற்கு வனத்துறை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. அதை சரிசெய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் இந்த ஆண்டும் குளங்களை தூர்வாரி இலவசமாக விவசாயிகள் வண்டல்மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் துறை யால் அமைக்கப்படும் பாலப் பணிகளின்போது குளங்களில் மண்ணை கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

மக்களுக்கு இடையூறாக இருக்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். விவசாயிகள் அறுவடை எந்திரங்களுக்கு அதிக வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. எனவே அதை அரசே வாங்கி விவசாயி களுக்கு வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தலக்குளம் பகுதியில் பொதுப் பணித்துறையின் தக்கலை கோட்டத்தின் கட் டுப்பாட்டில் உள்ள ஆலயன் குளத்தை அரசு செலவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி:-

நெல் கொள்முதல் நிலைய ங்களில் உள்ள பிரச்சினை தொடர்பாக நானே நேர டியாக ஆய்வு செய்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்கிறேன். பேச்சிப்பாறை அணை பணிகளை முடித்து தூர்வார நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வழக்கம் போல் இந்த ஆண்டும் அந்த ந்த தாசில்தார்கள் மூலம் விவசாயிகளுக்கு குளங்களை தூர்வாரி வண்டல் மண் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். குமரி மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக கலெக்டர் மூலமாக வே ளாண்மை பொறியியல் துறை க்கு அறுவடை எந்திரம் வாங்க தேவையான நட வடிக்கை எடுக்கப்படும்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர்:-

அணைகளில் இருந்து மேலும் 15 தினங்கள் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

வழக்கமாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கடந்த கூட் டத்தில் விவசாயிகள் தரப்பில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பதோடு கூட்டத்தில் அதுதொடர்பாக கருத்து பரிமாற்றம் நடை பெறும். பிரதமர் வருகைக் கான முன்ஏற்பாட்டு பணி களில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால் நேற்று ஒரு மணி நேரம் மட்டுமே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

அதனால் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடை பெறவில்லை. எழுத்துப்பூர் வமான பதில் மட்டும் சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முக்கிய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப் பட்டது.