மாவட்ட செய்திகள்

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணி + "||" + Women's Self Help Groups are aware of 100 per cent voting

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணி

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணி
திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் பெரம்பூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மெஹந்தி மூலம் கைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், எனது ஓட்டு எனது உரிமை என எழுதி மக்களிடையே விழிப்புணர்வு செய்தனர். மேலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்திடும் கருவி, வாக்களிப்பது நமது கடமை என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.
2. தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில், தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.
4. அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
5. மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.